அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவில் ரூ.2 கோடி உண்டியல் வசூல்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவில் பக்தர்களின் காணிக்கையாக ரூ.2 கோடி உண்டியல் வசூல் ஆனது.
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா தீபம் கடந்த 2-ந்தேதி ஏற்றப்பட்டது.

இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் ஏற்றப்படும். அதாவது மலை உச்சியில் 12-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை மகா தீபம் காட்சி அளிக்கும். இதற்கு தேவையான நெய், திரி போன்றவை தினமும் காலையில் கொண்டு செல்லப்படுகிறது.

மகா தீபத்தின் போது அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்து மகா தீபத்தை காண முடியாத பக்தர்கள், இந்த 11 நாட்களில் ஒரு நாள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு, மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தையும் பார்த்துவிட்டு செல்கின்றனர்.

இதனால் தற்போது கோவிலில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.

இதனால் சுமார் 1½ மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள 30 உண்டியல்களும், கிரிவலப்பாதையில் வைக்கப்பட்டு இருந்த 55 உண்டியல்களும் இணை ஆணையர் ஜெகன்நாதன் மேற்பார்வையில் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நேற்று கோவில் வளாகத்தில் நடந்தது.

இதில் ரூ.2 கோடியே 9 லட்சத்து 85 ஆயிரத்து 443-பணம், 409 கிராம் தங்கம், 1,275 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com