ஊரடங்கால் வேலைக்கு செல்ல முடியாததால் தொழிலாளி தற்கொலை

அருமனை அருகே ஊடரங்கால் வேலைக்கு செல்ல முடியாததால் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on: 

அருமனை:

அருமனை அருகே மாத்தூர்கோணம் பகுதியை சேர்ந்தவர் முத்துகுட்டி என்கிற வில்சன் (வயது 48). இவர் கேரளாவில் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 6 மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் தவித்தார். போதிய வருமானம் இல்லாமல் குடும்ப செலவுகளை எதிர்கொள்ள முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டார்.

இதனால் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்தநிலையில், நேற்று முன்தினம் வில்சன் வீட்டின் அருகே ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அருமனை அருகே பத்துக்காணி கல்லுவிளை பகுதியை சேர்ந்தவர் அனிலாஸ்(வயது 23), தொழிலாளி. இவர் வீடு கட்ட பலரிடம் பணம் கடன் வாங்கியதாக தெரிகிறது. வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுக்க தொடங்கினர். இதனால் மனமுடைந்த அனிலாஸ், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆறுக்காணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X