களியக்காவிளையில் பிரபல கஞ்சா வியாபாரி கைது

களியக்காவிளையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற பிரபல கஞ்சா வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
களியக்காவிளையில் பிரபல கஞ்சா வியாபாரி கைது
Published on

களியக்காவிளை:

களியக்காவிளை இன்ஸ்பெக்டர் ஜமால் மற்றும் போலீசார் நேற்று ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் ஆர்.சி. தெருவில் ரோந்து வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர் முன்னுக்குபின் முரணான தகவலை கூறினார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.   விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ரீகன் (வயது 33) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் சோதனை  மேற்கொண்டதில் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் இருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரீகன் பிரபல கஞ்சா வியாபாரி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com