இலவச கல்விக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - சென்னை பல்கலைக்கழகம்

ஏழை, எளிய மாணவர்கள் இலவசக் கல்விக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை பல்கலைக்கழகம்
சென்னை பல்கலைக்கழகம்
Published on

சென்னை:

சென்னை பல்கலைக்கழகம் இலவச கல்வி தொடர்பாக சில அறிவிப்புகளை இன்று வெளியிட்டுள்ளது.  அதன்படி ஏழை, எளிய மாணவர்கள் இலவசக் கல்விக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.

விண்ணப்பிக்கும் மாணவர்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என தெரிவித்த பல்கலைக்கழகம், மேலும் இலவச கல்விக்கு விண்ணப்பிக்கும் மாணவரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

மேற்கொண்டு இலவசக் கல்வி பெற விரும்பும் மாணவர்கள் www.unom.ac.in என்ற இணையதளத்தில் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.  

X

Maalai Malar
www.maalaimalar.com