ஐ.ஓ.எஸ். 11 மற்றும் வாட்ச் ஓ.எஸ்.4.0 அறிமுகம்

ஐபோன், ஐபேட், ஐபாட் டச் மற்றும் ஆப்பிள் வாட்ச் சாதனங்களுக்கு ஐஓஎஸ் 11 மற்றும் வாட்ச் ஓ.எஸ்.4.0 இயங்குதளத்தை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஐ.ஓ.எஸ். 11 மற்றும் வாட்ச் ஓ.எஸ்.4.0 அறிமுகம்
Published on

ஐபோன், ஐபேட், ஐபாட் டச் சாதனங்களுக்கான ஐஓஎஸ் 11 மற்றும் ஆப்பிள் வாட்ச் வாடிக்கையாளர்களுக்கான வாட்ச் ஓ.எஸ். 4.0 அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

ஆப்பிள் டெவலப்பர் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட ஐஓஎஸ் 11 இயங்குதளம் ஐபோன் 5s மற்றும் அதன்பின் வெளியிடப்பட்ட ஐபோன் மாடல்களில் இன்ஸ்டால் செய் முடியும். இதேபோல் ஐபேட் ஏர், ஐபேட் ப்ரோ மாடல், ஐபேட் 5-ம் தலைமுறை, ஐபேட் மினி 2  மற்றும் ஐபாட் டச் 6-ம் தலைமுறை மாடல்களில் இன்ஸ்டால் செய்ய முடியும்.

புகிய ஐஓ.எஸ். 11 இயங்குதளம் 64-பிட் செயலிகளை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் 32-பிட் செயலிகள் புதிய இயங்குதளத்தில் வேலை செய்யாது. 32 பிட் செயலிகளை பயன்படுத்த ஆப் டெவலப்பர் மூலம் அவற்றை அப்டேட் செய்ய வேண்டும்.  

ஐஓ.எஸ். 11 அப்டேட் புதிய ஃபைல்ஸ் செயலி, மேம்படுத்தப்பட்ட சிரி, வாய்ஸ் டிரான்ஸ்லேஷன், யுனிஃபைடு கண்ட்ரோல் சென்டர் மற்றும் பல்வேறு முக்கிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஐபேட் சாதனங்களை பொருத்த வரை இந்த அப்டேட் பெரிய அப்டேட்டாக பார்க்கப்படுகிறது. இதில் முன்பைவிட தலைச்சிறந்த மல்டி-டாஸ்கிங் அம்சங்கள் மற்றும் ஆப்பிள் பென்சில் பயன்படுத்த பல்வேறு ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com