ஆன்லைனில் ரூ.1.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் ஐபோன் X

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் X ஸ்மார்ட்போனிற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக ஆன்லைனில் ஐபோன் X ஸ்மார்ட்போன் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆன்லைனில் ரூ.1.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் ஐபோன் X
Published on

ஆப்பிள் நிறுவனத்தின் பத்தாவது ஆண்டு விழா ஐபோன் X ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கிய சில நிமிடங்களில் விற்பனை நிறைவுற்றது. இதை தொடர்ந்து, புதிய ஐபோன் X ஸ்மார்ட்போனிற்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் பிரபல ஆன்லைன் தளமான OLX -இல் 256ஜிபி ஐபோன் X ஸ்மார்ட்போன் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

முன்கூட்டியே புத்தம் புதிய ஐபோன் X ஸ்மார்ட்போனினை வாங்கியவர்கள் தக்க சமயத்தில் அவற்றை விற்று அதிக லாபம் பெற நினைத்து OLX தளத்தில் அவர்கள் வாங்கிய ஐபோன் X ஸ்மார்ட்போனினை அதிகபட்சம் ரூ.1,50,000 வரை நிர்ணயம் செய்துள்ளனர். இந்தியாவில் வாங்கிய ஸ்மார்ட்போன் என்பதால் வாரண்டியும் பெற முடியும்.

அந்த வகையில் ஐபோன் X ஸ்மார்ட்போனின் 256 ஜிபி மாடலின் விலை ரூ.1,15,000 முதல் ரூ.1,50,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்றொரு விற்பனையாளர் ஐபோன் X 64 ஜிபி மாடல் ரூ.1,15,000 மற்றும் 256 ஜிபி மாடல் ரூ.1,35,000 என நிர்ணயம் செய்துள்ளார். இந்தியாவில் ஐபோன் X ஸ்மார்ட்போனின் 64 ஜிபி மாடல் ரூ.98,000க்கும் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய ஐபோன்களை முதல் நாளிலேயே பெற வேண்டும் என்பவர்கள் அதிக தொகை செலுத்தி புதிய ஐபோனினை பெறலாம். இதுதவிர ஏற்கனவே பிளிப்கார்ட் தளத்தில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு புதிய ஐபோன்களை வேகமாக விநியோகம் செய்ய பிளிப்கார்ட் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com