ஐபோன் 7 ஆன்லைனில் ரூ.19,800 தள்ளுபடி
புதுடெல்லி:
ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிற்கு தொடர்ச்சியாக தள்ளுபடிகள் வழங்கப்பட்டு வருகிறது. முன்னதாக அமேசான் தளத்தில் ஐபோன் 7 ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.17,000 குறைக்கப்பட்ட நிலையில் பேடிஎம் தளத்திலும் ஐபோன் 7 மாடலின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி பேடிஎம் தளம் மற்றும் செயலியில் ஐபோன் 7 விலை ரூ.14,040 வரை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.45,960 என்ற விலையில் பேடிஎம் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் ப்ரோமோ கோட் பயன்படுத்தி ரூ.5,750 வரை கேஷ்பேக் பெற முடியும். அனைத்தையும் சேர்த்து ஐபோன் 7 விலையில் ரூ.19,790 வரை குறைக்கப்படுகிறது.
பேடிஎம் அறிவித்துள்ள சலுகை தற்சமயம் ஐபோன் 7 (32 ஜிபி) மாடலுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இந்த சலுகை எதுவரை வழங்கப்படும் என்பது குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
புதிய சலுகையின் கீழ் வழங்கப்படும் கேஷ்பேக் பேடிஎம் அக்கவுண்டில் 24 மணி நேரத்தில் வழங்கப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 7 சிறப்பம்சங்கள்:
* 4.7 இன்ச் ரெட்டினா எச்டி டிஸ்ப்ளே
* 64-பிட் A10 ஃபியூஷன் சிப்
* 2 ஜிபி ரேம்
* வாட்டர் ரெசிஸ்டண்ட்
* 12 எம்பி பிரைமரி கேமரா, 4K வீடியோ பதிவு செய்யும் வசதி
* 7 எம்பி செல்ஃபி கேமரா, 1080 பிக்சல் வீடியோ பதிவு செய்யும் வசதி
* கைரேகை ஸ்கேனர்
* 1960 எம்ஏஎச் பேட்டரி
ஆப்பிள் இணையத்தளத்தில் ஐபோன் 7 (32 ஜிபி) மாடல் ரூ.60,000 முதல் துவங்குகிறது. இதே போல் ஐபோன் 7 பிளஸ் ரூ.72,000 முதல் துவங்குகிறது. அதிகபட்சமாக ஐபோன் 7 256 ஜிபி ரூ.80,000 மற்றும் ஐபோன் 7 பிளஸ் 256 ஜிபி ரூ.92,000 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் ஆப்பிள் சமீபத்தில் வெளியிட்ட ஐஓஎஸ் 11 இயங்குதள அப்டேட் பீட்டா பதிப்பில் ஐபோன் 7 வாடிக்கையாளர்கள் பெற முடியும். புதிய இயங்குதளத்தில் ஐபோனின் மெமரியை மேம்படுத்தும் பல்வேறு புதிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

