அமேசான் தளத்தில் மட்டும் ரூ.19,600 தள்ளுபடியுடன் ஐபோன் 6
புதுடெல்லி:
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6 32 ஜிபி மாடல் மார்ச் மாத வாக்கில் இந்தியாவில் வெளியிடப்பட்டது. எனினும் ஸ்பேஸ் கிரே நிறத்தில் மட்டுமே இந்த மாடல் வெளியிடப்பட்டது. இம்முறை கோல்டு நிறம் கொண்ட ஐபோன் 6 இந்தியாவில் வெளியிடப்பட்டு அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படுகிறது.
புதிய ஐபோன் 6 கோல்டு நிற மாடல் அமேசானில் ரூ.26,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது வாடிக்கையாளர்களுக்கு ரூ.19,600 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் வாடிக்கையாளர்கள் ரூ.1,283 மாத தவணை செலுத்த முடியும்.
ஐபோன் 6 வாங்கும் வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு 45 ஜிபி அளவு கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. சிறப்பம்சங்களை பொருத்த வரை ஐபோன் 6-இல் 4.7 இன்ச் எச்டி ரெட்டினா டிஸ்ப்ளே, 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆப்பிள் A8 சிப்செட், 1 ஜிபி ரேம், ஐஓஎஸ் 10 இயங்குதளம் மற்றும் 32 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 8 எம்பி பிரைமரி கேமரா, 1.2 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் 1810 எம்ஏஎச் பேட்டரி, வைபை, ப்ளூடூத், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் பத்தாவது ஆண்டு ஐபோன் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியாகியுள்ள தகவல்களில் புதிய ஐபோன் 8 டூயல் பிரைமரி கேமரா செட்டப், ஆக்மென்ட்டெட்ட ரியாலிட்டி வசதி உள்ளிட்டவை வழங்கப்படும் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

