சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம்

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
தலைமை நீதிபதி ஏபி சாஹி
தலைமை நீதிபதி ஏபி சாஹி
Published on

சென்னை:

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்தவர் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை பொறுப்பு நீதிபதியாக வினீத் கோத்தாரி இருந்து வருகிறார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com