கால்பந்து: வேல்ஸ் அணியை 2-0 என வீழ்த்திய பிரான்ஸ்

உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான முன்னோட்டமாக கருதப்படும் நட்பு ரீதியிலான ஆட்டத்தில் வேல்ஸ் அணியை 2-0 என பிரான்ஸ் வீழ்த்தியது.
கால்பந்து: வேல்ஸ் அணியை 2-0 என வீழ்த்திய பிரான்ஸ்
Published on

ரஷியாவில் அடுத்த ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற இருக்கிறது.  இதற்கு முன்னோட்டமாக பிரபல நாடுகளுக்கு இடையே நட்பு ரீதியிலான ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் பிரான்ஸ் - வேல்ஸ் அணிகள் மோதின.  இதில் பிரான்ஸ் 2-0 என வெற்றி பெற்றது. அட்லெடிக்கோ மாட்ரிட் அணியின் முன்னணி வீரரான கிரிஸ்மான் ஒரு கோலும், அர்செனல் அணியின் ஆலிவியர் ஜிரார்டு ஒரு கோலும் அடித்தனர்.

இருவரும் அந்தந்த கிளப்பிற்காக விளையாடும்போது கோல் அடிக்காமல் திணறி வந்தார்கள். தற்போதைய இந்த ஆட்டம் அவர்களுக்கு தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com