கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்த திமுக- டுவிட்டரில் கிண்டலடித்த பாஜக

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோலமிட்ட தி.மு.க.வுக்கு தமிழக பாரதிய ஜனதா டுவிட்டரில் கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளது.
குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டில் போடப்பட்டுள்ள கோலம்.
குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டில் போடப்பட்டுள்ள கோலம்.
Published on

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வீட்டு வாசல்களில் “வேண்டாம் சி.ஏ.ஏ., வேண்டாம் என்.ஆர்.சி.” என்பதை குறித்து கோலம் போடும்படி தி.மு.க. மகளிர் அணியினரை கனிமொழி எம்.பி. கேட்டுக்கொண்டார்.

அதன்படி இன்று தி.மு.க.வினர் வீடுகள் முன்பு குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு கோலங்களை போட்டனர்.

சென்னையில் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் வீடுகள் முன்பும் கோலம் போடப்பட்டுள்ளது. இது வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இந்த நிலையில் தி.மு.க. வினர் கோலம் போடுவதை தமிழக பா.ஜனதா சார்பில் கிண்டலடித்து டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

ஒரு திராவிட கட்சியை படிப்படியாக ஆன்மீக கட்சியாக உருவெடுக்க வைக்கும் பிரசாந்த் கிஷோருக்கு எங்கள் பாராட்டுக்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com