விவசாயிகள் பிரச்சினைக்காக 23ம் தேதி முதல் போராட்டம் - அன்னா ஹசாரே அறிவிப்பு

விவசாயிகள் பிரச்னைக்காக டெல்லியில் வரும் 23-ம் தேதி முதல் போராட்டம் நடத்தப்போவதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார். #AnnaHazare
விவசாயிகள் பிரச்சினைக்காக 23ம் தேதி முதல் போராட்டம் - அன்னா ஹசாரே அறிவிப்பு
Published on

மும்பை:

சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

லோக்பால் நடைமுறை, லோக் ஆயுக்தா நியமனம், விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் பென்ஷன் மற்றும் விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 23-ம் தேதி முதல் போராட்டம் நடத்தவுள்ளேன்.

ஜன்லோக்பால் மசோதாவை வலியுறுத்தி போராட்டம் நடத்தியபோது கிடைத்த பொதுமக்களின் மகத்தான ஆதரவு, அடுத்து விவசாயிகளின் பிரச்சினைகளை வலியுறுத்தி நடத்த இருக்கும் போராட்டத்துக்கும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். #AnnaHazare #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com