தண்டுபத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்- அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பங்கேற்பு

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தண்டுபத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
Published on

உடன்குடி:

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இணையவழிக் கல்வியை முறைப்படுத்த வலியுறுத்தியும் தண்டுபத்தில் தி.மு.க. இளைஞர் மற்றும் மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் பை.மூ.ராமஜெயம் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட பொருளாளர் வி.பி.ராமநாதன், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நீட் தேர்வின் பாதிப்புகள், இணைய வழிக்கல்வியில் உள்ள குறைபாடுகள் குறித்து பேசினார்.

தொடர்ந்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் டி.பி.பாலசிங் (உடன்குடி), பி.ரமேஷ் (திருச்செந்தூர்), நவீன்குமார் (ஆழ்வார்திருநகரி கிழக்கு), இளையராஜா (ஓட்டப்பிடாரம் வடக்கு), மாநில பொதுக்குழு உறுப்பினர் இந்திரகாசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com