டென்னிஸ் உலக தரவரிசை: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் இடத்தில் நீடிக்கிறார் ஆண்டி முர்ரே

சர்வதேச டென்னிஸ் தரவரிசை இன்று வெளியிடப்பட்டது. இதில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே முதல் இடத்தை தக்க வைத்துள்ளார். ஜோகோவிச் 2-வது இடத்தில் உள்ளார்.
டென்னிஸ் உலக தரவரிசை: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் இடத்தில் நீடிக்கிறார் ஆண்டி முர்ரே
Published on

சர்வதேச டென்னிஸ் தரவரிசை இன்று வெளியிடப்பட்டது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே 11270 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார்.

செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 7085 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா 5685 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 5125 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், ஸ்பெயின் நாட்டின் நடால் 4375 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.

ரயோனிக் (கனடா), மரின் சிலிக் (குரோஷியா), கெய் நிஷிகோரி (ஜப்பான்), டொமினிக் தீம் (ஆஸ்திரேலியா), டேவிட் கோஃபின் (பெல்ஜியம்) முறையே 6-வது இடம் முதல் 10-வது இடம் வரை பிடித்துள்ளனர்.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் முதல் இடத்தில் உள்ளார். ஏஞ்சலிக் கெர்பர் 2-வது இடத்திலும், கரோலினா ப்ளிஸ்கோவா 3-வது இடத்திலும் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com