

முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 123 ரன்னும், இங்கிலாந்து 194 ரன்களும் எடுத்தது. 2-வது இன்னிங்சை வெஸ்ட் இண்டீஸ் தொடங்கிய போது 35 வயதான ஆண்டர்சன் அபாரமாக பந்து வீசினார். அவர் 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தி வெஸ்ட் இண்டீசை 177 ரன்னில் அல்அவுட் செய்ய வைத்தார். இதனால் இங்கிலாந்துக்கு 107 ரன்கள் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் அணியால் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்ய முடிந்தது.
பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 எனக்கைப்பற்றியது.
முதல் இன்னிங்சில் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தியதால் லார்ட்ஸ் டெஸ்டில் 9 விக்கெட்டுக்கள் அள்ளினார். அத்துடன் 500 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்தார்.
இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய ஆண்டர்சன் தொடர் நாயகன் விருது பெற்றார். இதன்மூலம் ஐ.சி.சி. டெஸ்ட் பந்து வீசசாளர்கள் தர வரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.