தமிழகத்தில் புதிய மணல் குவாரிகள் அமைக்க விடமாட்டோம்: அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் புதிய மணல் குவாரிகள் அமைக்க விட மாட்டோம், இருக்கிற மணல் குவாரிகளையும் மூட வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
தமிழகத்தில் புதிய மணல் குவாரிகள் அமைக்க விடமாட்டோம்: அன்புமணி ராமதாஸ்
Published on

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரத்தில் பா.ம.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கூட்டத்தில் மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. மாறி, மாறி ஆட்சி செய்ததால் லஞ்சம் பெருகிவிட்டது. மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வரவில்லை. நாங்கள் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து குளங்களை தூர்வாரி வருகிறோம். ஆனால், தற்போது மு.க.ஸ்டாலின் குளங்களை தூர்வாருவதாக கூறுகிறார். தி.மு.க. ஆட்சியில் இருந்த போது ஏன் குளங்களை தூர்வாரவில்லை.

தமிழகத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க அரசு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. பா.ம.க. தொடர்ந்த வழக்கில் நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி தமிழகத்தில் 60 சதவீத மதுக்கடைகள் மூடப்பட்டன.

இதன்மூலம் குறைந்தபட்சம் 50 சதவீத மதுபான விற்பனையாவது குறைந்திருக்க வேண்டும். ஆனால் 15 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் புதிதாக 70 மணல் குவாரிகள் தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது ஆளுங்கட்சியினர் கொள்ளை அடிப்பதற்கே உதவும். எனவே புதிய மணல் குவாரிகள் அமைக்க விட மாட்டோம், இருக்கிற மணல் குவாரிகளையும் மூட வேண்டும். பத்திரப்பதிவு கட்டணம் 1 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இது பொதுமக்களை பாதிக்கும் என்பதால், திரும்ப பெற வேண்டும்.

நடிகர்கள் அரசியலுக்கு தேவை இல்லை. படித்தவர்கள், இளைஞர்கள் வரவேண்டும். ஊழல் இல்லாமல், படித்தவர்கள், நல்லவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். இவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியில் அதிகமாகவே உள்ளனர். எனவே நிச்சயமாக நாங்கள் ஆட்சியை பிடிப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com