ஆஸ்திரேலியா தொடரில் இருந்து ஹசிம் அம்லா விலகல்

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாட இருக்கும் தென்ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் அணியில் இருந்து ஹசிம் அம்லா விலகியுள்ளார். #Amla
ஆஸ்திரேலியா தொடரில் இருந்து ஹசிம் அம்லா விலகல்
Published on

தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி தொடக்க பேட்ஸ்மேனாக விளங்கி வருபவர் ஹசிம் அம்லா. தற்போது அம்லா கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இதனால் ஜிம்பாப்வேயிற்கு எதிரான தொடரில் பங்கேற்கவில்லை.

அடுத்த மாதம் ஆஸ்திரேலியா சென்று ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து அம்லா விலகியுள்ளார்.

அடுத்த வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருப்பதாலும், தென்ஆப்பிரிக்கா தொடர்ந்து விளையாட இருப்பதாலும், பாதுகாப்பு கருதி தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com