

அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கப்தில், ஹசிம் அம்லா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கப்தில் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த ஷேன் மார்ஷ் அம்லாவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
மார்ஷ் 43 பந்தில் 58 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அம்லா 104 ரன்கள் (60 பந்தில் 8 பவுண்டரி, 5 சிக்ஸ்) குவித்து கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார். இந்த தொடரில் அம்லாவின் 2-வது சதம் இதுவாகும். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 125 ரன்கள் குவித்தது.