சிறுமியை கடத்தி திருமணம்- ஆம்புலன்ஸ் டிரைவர்கள் 3 பேர் கைது

கொளத்தூர் அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

கொளத்தூர்:

கொளத்தூரை அடுத்த சித்திரைப்பட்டி புதூரை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவரை குஞ்சாண்டியூரை அடுத்த திப்பம்பட்டியை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் விக்னேஷ் (வயது 24) என்பவர் கடந்த 11-ந் தேதி கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கொளத்தூர் போலீசார் நேற்று விக்னேசை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த சிறுமியை அவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதும், இதற்கு உடந்தையாக விக்னேசின் அண்ணன் ஐயப்பன், பள்ளிப்பட்டியை சேர்ந்த மைத்துனர் கண்ணன் ஆகியோர் செயல்பட்டதும் தெரியவந்தது. இதனைதொடர்ந்து அவர்களும் கைது செய்யப்பட்டு 3 பேரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். அந்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு பிறகு பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் என்பது குறிப்பிடதக்கதாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com