பாலிவுட், கிரிக்கெட் பிரபலங்களுக்கு சிறப்பு விருந்து கொடுத்த அம்பானி குடும்பத்தினர்

தொழிலதிபர் முகேஷ் அம்பானி, தனது மகன் ஆகாஷ் அம்பானி - ஸ்லோகா மேத்தாவின் நிச்சயதார்த்ததை தொடர்ந்து, பாலிவுட், கிரிக்கெட் பிரபலங்களுக்கு இன்று சிறப்பு விருந்து அளித்தார்.
பாலிவுட், கிரிக்கெட் பிரபலங்களுக்கு சிறப்பு விருந்து கொடுத்த அம்பானி குடும்பத்தினர்
Published on

மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி. இவரது மனைவி நீத்தா அம்பானி. இந்த தம்பதிக்கு மூன்று பிள்ளைகள். அதில் முதல் மகன் ஆகாஷ் அம்பானி.

ஆகாஷ் அம்பானிக்கும், வைர வியாபாரி ரஸல் மேத்தா - மோனா மேத்தா தம்பதியரின் இளைய மகள் ஸ்லோகா மேத்தாவுக்கும் இந்த ஆண்டில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்குள் திருமணத்தை பிரமாண்டமாக நடத்துவதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருகிறது என செய்திகள் வெளியாகின.  

இதற்கிடையே, ஆகாஷ் அம்பானி - ஸ்லோகா மேத்தாவின் நிச்சயதார்த்த விழா நேற்று முன்தினம் கோவாவில் நடைபெற்றது. இதில் இரு குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்டனர்.

முகேஷ் அம்பானியின் மூத்த மகனான ஆகாஷ் அம்பானியும், ஸ்லோகா மேத்தாவும் திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளியில் ஒன்றாக படித்த காலத்தில் இருந்து நண்பர்களாக உள்ளனர்.

இந்நிலையில், மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி, தனது மகன் ஆகாஷ் அம்பானி - ஸ்லோகா மேத்தாவின் நிச்சயதார்த்ததை தொடர்ந்து, பாலிவுட் பிரபலங்களுக்கு இன்று சிறப்பு விருந்து அளித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com