"மருத்துவ மாணவர் சேர்க்கையில் உரிய இட ஒதுக்கீடு இல்லை என்றால், அனைத்து வகை இட ஒதுக்கீடும் தேவை இல்லை" - ஐகோர்ட் மதுரை கிளை

மருத்துவ மாணவர் சேர்க்கையில் உரிய இட ஒதுக்கீடு இல்லை என்றால், அனைத்து வகை இட ஒதுக்கீடும் தேவை இல்லை என ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி கருத்தை தெரிவித்துள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

மதுரை:

பணியில் உள்ள ராணுவ வீரர்களில் வாரிசுகளுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கு ஒன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையின் போது மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கள்:-  

ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு உரிய இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டாமா ? 

மருத்துவ மாணவர் சேர்க்கையில் உரிய இட ஒதுக்கீடு இல்லை என்றால், அனைத்து வகை இட ஒதுக்கீடும் தேவை இல்லை. 

என தெரிவித்துள்ளனர்.

முன்னதாக மருத்துவ மேற்படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டே 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக அரசு, திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடியாது என மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com