சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி காலமானார்

சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
அஜித் ஜோகி
அஜித் ஜோகி
Published on

சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சராகக் கடந்த 2000-ம் ஆண்டு பதவி வகித்தவர் அஜித் ஜோகி. இவர் அம்மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர். இதுமட்டுமின்றி அரசியலுக்கு வருவதற்கு முன்பு மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பு வகித்தவர்.

தற்போது 74 வயதான அஜித் ஜோகிக்குக் கடந்த மே 10-ம் தேதியன்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் ராய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவரது உடல்நலம் மோசமடைந்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் முதலமைச்சர் அஜித் ஜோகிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com