ரூ.1,799 விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்: ஏர்டெல் அதிரடி

பாரதி ஏர்டெல் மற்றும் கார்பன் நிறுவனங்கள் இணைந்து பீ்ச்சர்போன் விலையில் இரண்டு 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.
ரூ.1,799 விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்: ஏர்டெல் அதிரடி
Published on

பாரதி ஏர்டெல் மற்றும் கார்பன் மொபைல் நிறுவனங்கள் இணைந்து இரண்டு 4ஜி ஸ்மார்ட்போன்களை பீச்சர்போன்களை அறிமுகம் செய்துள்ளது. A1 இந்தியன் 4ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.1,799 விலையிலும் மற்றும் A41 பவர் ஸ்மார்ட்போன் ரூ.1,849 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 4.0 இன்ச் ஸ்கிரீன், 1 ஜிபி ரேம், டூயல் சிம் ஸ்லாட் மற்றும் டூயல் கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. கூகுள் சான்று பெற்ற 4ஜி ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள யூடியூப், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற செயலிகளை இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

A1 இந்தியன் 4ஜி ஸ்மார்ட்போன் வாங்க வாடிக்கையாளர்கள் ரூ.3,299 மற்றும் A41 பவர் 4ஜி ஸ்மார்ட்போன் வாங்க ரூ.3,349 செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் 36 மாதங்களுக்கு ரூ.169 திட்டத்தில் ஏர்டெல் ரீசார்ஜ் செய்ய வேண்டும், 18 மாதங்கள் நிறைவுற்றதும் ரூ.500 திரும்ப வழங்கப்படும் என்றும் மற்றொரு 18 மாதங்களில் ரூ.1,000 திரும்ப வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்பன் A1 சிறப்பம்சங்கள்:

- 4.0 இன்ச் WVGA 480x800 ஸ்கிரீன்
- 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
- 3.2 எம்பி பிரைமரி கேமரா
- 2 எம்பி செல்ஃபி கேமரா
- 1 ஜிபி ரேம்
- 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
- டூயல் சிம் ஸ்லாட்
- 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைபை
- 1500 எம்ஏஎச் பேட்டரி

கார்பன் A41 பவர் சிறப்பம்சங்கள்:

- 4.0 இன்ச் WVGA 480x800 ஸ்கிரீன்
- 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
- 2 எம்பி பிரைமரி கேமரா
- 0.3 எம்பி செல்ஃபி கேமரா
- 1 ஜிபி ரேம்
- 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
- டூயல் சிம் ஸ்லாட்
- 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைபை
- 2300 எம்ஏஎச் பேட்டரி

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com