ரூ.1,699 விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்: ஏர்டெல் மற்றும் லாவா திட்டம்

கார்பனை தொடர்ந்து, லாவா நிறுவனத்துடன் இணைந்து ரூ.1,699 விலையில் 4ஜி ஸ்மார்ட்போனினை ஏர்டெல் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரூ.1,699 விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்: ஏர்டெல் மற்றும் லாவா திட்டம்
Published on

கார்பன் நிறுவனத்துடன் இணைந்து கார்பன் A40 இந்தியன் எனும் 4ஜி ஸ்மார்ட்போனினை வெளியிட்டதை தொடர்ந்து, பாரதி ஏர்டெல் நிறுவனம் லாவா நிறுவனத்துடன் இணைந்து 4ஜி வோல்ட்இ வசதி கொண்ட ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன் லாவா அல்லது ஏர்டெல் என எந்த பெயரில் வெளியாகும் என்பது கேள்விகுறியாகவே உள்ளது. புதிய ஏர்டெல் மற்றும் லாவா ஸ்மார்ட்போன் கார்பன் A40 இந்தியன் மாடலுடன் ஒப்பிடும் போது அதிகப்படியான மாற்றங்கள் இருக்காது என்றும் கூறப்படுகிறது. லாவா ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,699 என நிர்ணயம் செய்யப்படலாம் என 91மொபைல்ஸ் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக வெளியான கார்பன் A40 இந்தியன் ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,399 என நிர்ணயம் செய்யப்பட்டது. லாவா போனின் விற்பனை முறை கார்பன் ஸ்மார்ட்போன் போன்றே இருக்கும் என கூறப்படுகிறது. அவ்வாறு வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போனினை ரூ.3,500 என்ற விலையில் வாங்க வேண்டும் என்றும் அதன்பின் ரூ.1,801 வரை கேஷ்பேக் வழங்கப்படும் என்தால் வாவா ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,699 எனலாம்.

ஏர்டெல் மற்றும் லாவா 4ஜி வோல்ட்இ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு சார்ந்த இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் இத்துடன் வாய்ஸ் கால் சலுகையும் சேர்க்கப்படும் என கூறப்படுகிறது. இதுவரை வெளியாகியுள்ள தகவல்களில் ஏர்டெல் லாவா ஸ்மார்ட்போனில் 4.5 இன்ச் அல்லது 5.0 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. எனினும் புதிய ஸ்மார்ட்போன் சார்ந்து லாவா சார்பில் எவ்வித தகவலையும் வழங்கவில்லை.

கார்பன் A40 இந்தியன் சிறப்பம்சங்கள்:

- 4.0-இன்ச் 800x480 பிக்சல் WVGA டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
- 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
- 1 ஜிபி ரேம்
- 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
- டூயல் சிம் ஸ்லாட்
- 5 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
- 0.3 எம்பி (VGA) செல்ஃபி கேமரா
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 1400 எம்ஏஎச் பேட்டரி

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com