பறக்கும் விமானத்தில் பணிப் பெண்ணிடம் பைலட் சில்மிஷம் - போலீஸ் விசாரணை

அகமதாபாத் - மும்பை இடையே செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பணிப்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பைலட் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #AirIndia
பறக்கும் விமானத்தில் பணிப் பெண்ணிடம் பைலட் சில்மிஷம் - போலீஸ் விசாரணை
Published on

மும்பை:

கடந்த 4-ம் தேதி அகமதாபாத் நகரிலிருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் சென்று கொண்டிருந்தது. நடு வானில் விமானம் சென்ற போது பணிப்பெண்ணிடம் பைலட் பாலியல் ரீதியான தொந்தரவு அளித்துள்ளார். இதனை அடுத்து அந்த பெண் சாஹர் போலீஸ் நிலையத்தில் பைலட் மீது புகாரளித்துள்ளார்.

புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், பைலட் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனினும், இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com