டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் லிப்ட் அறுந்து விழுந்து 5 பேர் காயம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இரண்டாவது மாடியில் இருந்து இன்று லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர். #AIIMS
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் லிப்ட் அறுந்து விழுந்து 5 பேர் காயம்
Published on

புதுடெல்லி:

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இரண்டாவது மாடியில் இருந்து இன்று லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர். #AIIMS

டெல்லியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டுள்ள எய்ம்ஸ் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் நிர்வாக அலுவலகத்தில் இயங்கிவரும் மின்தூக்கி (லிப்ட்) இன்று காலை சுமார் 11.45 மணியளவில் திடீரென அறுந்து விழுந்தது.

இந்த விபத்தில் மின்தூக்கி இயக்குபவர் உள்பட ஐந்து பேர் காயமடைந்தனர். அவர்களில் இருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, அந்த மின்தூக்கியை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com