தூத்துக்குடியில் உப்பளத் தொழிலாளர்களுக்கு போனஸ் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

தூத்துக்குடியில் உப்பளத் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on: 

தூத்துக்குடி:

தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் உப்பு தொழிலாளர்கள் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே உப்பளத் தொழிலாளர்களுக்கு 2020-க்கான தீபாவளி போனஸ் கோரிக்கை தொடர்பான பேச்சுவார்த்தை உப்புசங்க அலுவலகத்தில் நடந்தது. பேச்சுவார்த்தையில் உப்பு உற்பத்தியாளர்கள் சார்பில் சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்க தலைவர் கிரகதுரை, செயலாளர் தனபாலன், லட்சுமணன், தூத்துக்குடி மாவட்ட அண்ணா உப்பு தொழிற்சங்க தலைவர் குருசாமி, அருணாசலம், இந்திய தேசிய உப்பு தொழிலாளர் ஐக்கிய சங்க பொதுச் செயலாளர் பாக்கியராஜ், ஐ.என்.டி.யு.சி. சங்க செயலாளர் ராஜூ, சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் பொன்ராஜ், ஜில்லா உப்பு தொழிலாளர் சங்கம் பாலசிங்கம், பரமசிவன், கொம்பையா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையில் 2020-ம் ஆண்டு குறைந்தபட்சம் முழு அளவுக்கு வேலைக்கு வந்த தொழிலாளிக்கு தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரத்து 300-ம், பெண் தொழிலாளிக்கு ரூ.4 ஆயிரத்து 975-ம் வழங்க வேண்டும், இந்த போனசை 11.11.20-க்குள் வழங்க வேண்டும். 9 நாள் விடுமுறை சம்பளம், தொழிலாளர்களுக்கான செருப்பு மற்றும் கண்ணாடி வகைக்கு ரூ.300 வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

X