எம்.டி.என்.எல். பிராட்பேண்ட் மோடெம்களில் மால்வேர் தாக்குதல்

பி.எஸ்.என்.எல். மோடெம்களில் மால்வேர் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து எம்.டி.என்.எல். மோடெம்களிலும் மால்வேர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதிய மால்வேர் ஆயிரக்கணக்கான மோடெம்களை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.
எம்.டி.என்.எல். பிராட்பேண்ட் மோடெம்களில் மால்வேர் தாக்குதல்
Published on

புதுடெல்லி:    

இந்தியாவில் பிராட்பேண்ட் சேவை வழங்கி வரும் பி.எஸ்.என்.எல். மோடெம்களில் இடையூறை ஏற்படுத்தும் புதிய மால்வேர் தாக்குதல் அரங்கேறியது. இதைத் தொடர்ந்து மகாநகர் டெலிபோன் நிஜாம் லிமிட்டெட் (எம்.டி.என்.எல்.) நிறுவன பிராட்பேண்ட் மோடெம்களில் மால்வேர் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

புதிய மால்வேர் பாதிப்பு அந்நிறுவனத்தின் பிராட்பேண்ட் சேவைகளை புதுடெல்லியில் பாதித்துள்ளது. எனினும் இந்த இடையூறு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக எம்.டி.என்.எல். தெரிவித்துள்ளது. இதுவரை சுமார் 10,000 எம்.டி.என்.எல். மோடெம்கள் புதிய மால்வேர் மூலம் பாதிக்கப்பட்டது. 

தாய்வானை சேர்ந்த சிப்செட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுமார் 10,000 வாடிக்கையாளர்களின் பிராட்பேண்ட் சேவையில் இடையூறு ஏற்பட்டு மோடெம்கள் மீண்டும் கான்ஃபிகர் செய்யப்பட்டுள்ளது. என எம்.டி.என்.எல். நிறுவன தலைவர் பி.கே. புர்வார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மால்வேர் பாதிப்பில் சிக்கிய பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்களது இண்டர்நெட் தானாக ஆபாச படங்களை கொண்ட தளங்களை இயக்கியதாக தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் கண்டறியப்பட்ட புதிய மால்வேர் தாக்குதல் ஒருவாரத்திற்கு இணைய சேவையை முடக்கப்பட்டுள்ளது.     

புதிய மால்வேர் தாக்குதல் குறித்து வாடிக்கையாளர்களுக்கு அலைபேசி மற்றும் நேரடியாகவே தகவல் வழங்கப்படுகிறது. தேவையான வாடிக்கையாளர்களுக்கு மால்வேர் மூலம் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மாற்றாக புதிய ரவுட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது என எம்.டி.என்.எல். நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தாக்குதலில் பாதிப்படைந்த வாடிக்கையாளர்கள் தங்களின் மோடெம்களை ரீசெட் செய்தாலே போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பிராட்பேண்ட் மோடெம்கள் மால்வேர் மூலம் பாதிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு இடையூறை ஏற்படுத்தியது. சீரற்ற இணைய சேவைகளை வழங்கியதைத் தொடர்ந்து பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் தங்களது மோடெம்களை ரீசெட் செய்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com