ஜார்கண்ட் தேர்தல் முடிவு: வாக்காளர்களின் தீர்ப்பை மதிக்கிறோம் - அமித் ஷா கருத்து

ஜார்கண்ட் வாக்காளர்களின் தீர்ப்பை மதிக்கிறோம் என பா.ஜனதா தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியுள்ளார்.
அமித் ஷா
அமித் ஷா
Published on

புதுடெல்லி:

பா.ஜனதா தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஜார்கண்ட் வாக்காளர்களின் தீர்ப்பை பா.ஜனதா மதிக்கிறது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு பா.ஜனதா தொடர்ந்து பாடுபடும். கடந்த 5 ஆண்டுகள் ஜார்கண்டை ஆள வாய்ப்பளித்த அம்மாநில மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தேர்தலில் அயராத பாடுபட்ட பா.ஜனதா தொண்டர்களை பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்காக, ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “மாநிலத்துக்காக பாடுபட நல்வாழ்த்துகள். பல ஆண்டுகள் ஆட்சி செய்ய பா.ஜனதாவுக்கு வாய்ப்பளித்த ஜார்கண்ட் மக்களுக்கு நன்றி. கட்சி தொண்டர்களையும் பாராட்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com