

இங்கிலாந்தில் நடத்தப்படும் ‘டி20 பிளாஸ்ட்’ லீக்கில் ஹம்ப்ஷைர் அணிக்காக விளையாடுகிறார். 2016-ம் ஆண்டு இதே அணியில் இடம்பிடித்திருந்த அப்ரிடி இடையிலேயே வெளியேறினார். அந்த அணி சவுத் குரூப்பில் கடைசி இடத்திற்கு முந்தைய இடத்தை பிடித்தது. அப்ரிடி 12 போட்டிகளில் 9 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார்.
இந்நிலையில், ஜூலை 7-ம் தேதி தொடங்க உள்ள டி20 பிளாஸ்ட் லீக்கில் விளையாடுவதற்காக ஹம்ப்ஷைர் அணிக்கு அப்ரிரி திரும்புகிறார்.