ஆப்கானிஸ்தான் - வங்காள தேசம் இடையே டி20 தொடர்- டேராடூனில் நடக்கிறது

ஆப்கானிஸ்தான் - வங்காள தேச அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் டேராடூனில் நடக்கிறது. #AFGvBAN
ஆப்கானிஸ்தான் - வங்காள தேசம் இடையே டி20 தொடர்- டேராடூனில் நடக்கிறது
Published on

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டியில் விளையாடக் கூடிய அந்தஸ்து பெற்றுள்ளது. அந்த அணி இந்தியாவை சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வருகிறது.

ஆப்கானிஸ்தான் வங்காள தேச அணிக்கெதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதாக இருந்தது. தற்போது 2020 டி20 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு வங்காள தேசம் சம்மதம் தெரிவித்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான தொடர் டேராடூனில் நடைபெற இருக்கிறது. வங்காள தேச கொல்கத்தா அல்லது பெங்களூரு மைதானத்தில் விளையாட விரும்பியது. ஆனால் ஆப்கானிஸ்தான் அணி டேராடூனை தேர்வு செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com