ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் ஹெராட் மாகாணத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Afghanistan #Heratblast
ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு
Published on

காபுல்:

ஆப்கானிஸ்தானின் ஹெராட் மாகாணத்தின் ஷிண்டாண்ட் மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதி அருகே நேற்று பயங்கரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிலரது உடல்நிலை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

கடந்த மாதம் இதே பகுதியில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதல்களில் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Afghanistan #Heratblast #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com