செய்தித் தொடர்பாளர்கள் தவிர மற்றவர்கள் கருத்தை ஏற்க வேண்டாம்- அதிமுக வேண்டுகோள்

அ.தி.மு.க. சார்பில் கருத்து பெற செய்தித் தொடர்பாளர்கள் தவிர மற்றவர்கள் கருத்தை ஏற்க வேண்டாம் என்று அதிமுக தலைமைக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
செய்தித் தொடர்பாளர்கள் தவிர மற்றவர்கள் கருத்தை ஏற்க வேண்டாம்- அதிமுக வேண்டுகோள்
Published on

சென்னை:

அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க.வின் சார்பில் அதிகாரப்பூர்வ கருத்துக்களை தெரிவிப்பதற்காக, கழகத்தின் செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள்.

இவர்களைத் தவிர மற்றவர்கள் கழகத்தின் சார்பில் கருத்துக்களை ஊடகங்கள், பத்திரிகைகள் வழியாக தெரிவிப்பது முறையாக இருக்காது என்பதையும் தாங்கள் ஏற்பீர்கள்.

எனவே அன்பு கூர்ந்து இனி, கழகத்தின் பிரதிநிதிகள் என்றோ, கழகத்தின் பெயரை வேறு எந்த வகையிலோ பிரதிபலிக்கும்படி யாரையும் தங்கள் ஊடக வழியாக கருத்துகளை தெரிவிக்க அழைக்கவோ, அனுமதிக்கவோ வேண்டாம் என்றும், வேறு யாரையும் அழைத்து அவர்களை அ.தி.மு.க. என்று அடையாளப்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

அவ்வாறு மீறுகின்ற பட்சத்தில் அந்த நபர்கள் கொடுக்கும் பேட்டிகளுக்கோ, செய்திகளுக்கோ அ.தி.மு.க. எந்த வகையிலும் பொறுப்பேற்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இது சம்பந்தமாக சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு எங்களை ஆட்படுத்த மாட்டீர்கள் என நம்புகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com