காவிரி மேலாண்மை வாரியத்துக்காக ராஜினாமா செய்ய தயார்- 3 அ.தி.மு.க. எம்.பி.க்கள் அறிவிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் கோரி பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த மூன்று எம்.பி.க்கள் அறிவித்துள்ளனர். #CauveryIssue #CauveryManagementBoard
காவிரி மேலாண்மை வாரியத்துக்காக ராஜினாமா செய்ய தயார்- 3 அ.தி.மு.க. எம்.பி.க்கள் அறிவிப்பு
Published on

சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்ச நீதிமன்றம் விதித்த கெடு இன்றுடன் முடிந்துள்ள நிலையில், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே காவிரி விஷயத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை ஏற்று காவிரி மேலாண்மை வாரியம் கோரி பதவியை ராஜினாமா செய்யத் தயார் என அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.பி.க்கள் அருண்மொழித்தேவன், அரி, குமார் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

ராஜினாமா செய்தால் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்றால் அதற்கு தயாராக இருப்பதாக மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணனும் கூறியது குறிப்பிடத்தக்கது. #CauveryIssue #CauveryManagementBoard #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com