ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ மனைவி, மகளுக்கும் கொரோனா

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனியின் மனைவி மற்றும் மகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Published on

ஸ்ரீபெரும்புதூர்:

தமிழகத்தில் கொரேனா வைரஸ் தாக்கம் உச்சத்தில் உள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் பலருக்கும் நோய் தொற்றி உள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே கொரோனா உறுதி செய்யப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனியின் மனைவி மற்றும் மகளுக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com