செய்தித் தொடர்பாளர்கள் ஊடக விவாதங்களில் பங்கேற்கலாம் - அதிமுக அனுமதி

அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர்கள் ஒன்றாம் தேதி முதல் ஊடக விவாதங்களில் கலந்து கொள்ளலாம் என அக்கட்சியின் தலைமை அனுமதி அளித்துள்ளது.
அதிமுக தலைமை அலுவலகம்
அதிமுக தலைமை அலுவலகம்
Published on

சென்னை:

அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமை தற்போது உள்ளது. இதனை மாற்றிவிட்டு ஒற்றைத் தலைமையில் கட்சி இயங்க வேண்டும் என எம்எல்ஏ ராஜன் செல்லப்பா சமீபத்தில் கருத்து தெரிவித்தார். அவரது கருத்துக்கு கட்சியில் சில நிர்வாகிகள் ஆதரவும் தெரிவித்தனர். இது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. 

இதற்கிடையே, ஒற்றை தலைமை விவகாரத்தை அடுத்து மறு அறிவிப்பு வரும் வரை அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர்கள் ஊடகங்களில் கருத்து தெரிவிக்க தடை விதித்து  கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவுறுத்தியிருந்தனர். 

இந்நிலையில், அ.தி.மு.க. தலைமை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர்கள் வரும் 1-ம் தேதி முதல் ஊடக விவாதங்களில் கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com