முதுகுளத்தூர் தொகுதியில் அதிமுக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி

முதுகுளத்தூர் தொகுதியில் அ.தி.மு.க., ஜெயலலிதா பேரவை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி நடந்தது.
முதுகுளத்தூர் தொகுதியில் அதிமுக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி
Published on

முதுகுளத்தூர்:

அ.தி.மு.க., ஜெயலலிதா பேரவை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி பார்த்திபனூரில் இருந்து அபிராமம், முதுகுளத்தூர், வெண்ணீர் வாய்க்கால், கீழத்தூவல், பாம்பூர் வழியாக பரமக்குடி வரை நடந்தது.

வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முனியசாமி, மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் சதன் பிரபாகர், முன்னாள் மாவட்ட செயலாளர் சுந்தர பாண்டியன், விவசாய அணி மாநில இணை செயலாளர் கர்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைசெயலாளர் சங்கர பாண்டியன் வரவேற்றார்.

இதில் 2,700 பேர் கலந்து கொண்டனர். முதுகுளத்தூர் பஸ் நிலையத்தில் அ.தி.மு.க., அரசின் சாதனைகளை துண்டு பிரசுரமாக பொதுமக்களுக்கு வழங்கினர்.

பேரணியில் ஒன்றிய செயலாளர்கள் காளிமுத்து (கமுதி), முனியசாமி பாண்டியன் (கடலாடி), அந்தோணிராஜ் (சாயல்குடி), முதுகுளத்தூர் ஒன்றிய அவைத்தலைவர் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com