சென்னை அடையாறு நட்சத்திர சொகுசு ஓட்டல் ரூ.24 கோடி வரி பாக்கி

சென்னை அடையாற்றில் உள்ள கிரவுன் பிளாசா ஓட்டல் சுமார் 24 கோடியே 88 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து வரி கட்டவில்லை என மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டிவிட்டு சென்றனர்.
சென்னை அடையாறு நட்சத்திர சொகுசு ஓட்டல் ரூ.24 கோடி வரி பாக்கி
Published on

சென்னை:

சென்னை ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில் உள்ளது கிரவுன் பிளாஸா ஹோட்டல். அடையார் கேட் ஓட்டல் என்றும் பார்க் ஷெரட்டன் ஹோட்டல் என்றும் பொதுமக்களால் பெரிதும் அறியப்பட்டது. இந்த ஓட்டலுக்கு கிரவுன் பிளாஸா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் மத்திய அமைச்சர்களின் நிகழ்ச்சிகளும் இங்கு நடத்தப்படுகின்றன.

இந்த ஒட்டலுக்கு பல ஆண்டுகளாக சொத்துவரி கட்டப்படவில்லை என்றும், மாநகராட்சி சார்பில் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் ஓட்டல் நிர்வாகம் சார்பில் எந்தப் பதிலும் இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் 24 கோடியே 88 லட்சம் ரூபாய் சொத்துவரி கட்டவில்லை என ஓட்டல் முன் மாநகராட்சி அதிகாரிகள் தண்டோரா போட்டனர்.

மேலும், ஹோட்டலுக்கு சீல் வைப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். இதையடுத்து ஓட்டல் நிர்வாகம் சார்பில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி 10 நாள் அவகாசம் கோரப்பட்டது. ஆனால், 2 நாள் அவகாசம் அளித்த அதிகாரிகள், அதற்குள் சொத்துவரியை கட்ட அறிவுறுத்தியதோடு ஓட்டலில் நோட்டீஸ் ஒட்டிவிட்டுச் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com