தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினரை நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறினார். #Thoothukudi $SterliteProtest #ActorVijay
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல்
Published on

தூத்துக்குடி:

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி தூத்துக்குடியில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டு சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்ட ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இதையடுத்து நீதிபதி அருணா ஜெகதீசன் நேற்று தூத்துக்குடிக்கு வந்து விசாரணையை தொடங்கினார்.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நடிகர் விஜய் நேற்று நள்ளிரவில் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது அவர் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் கூறியதுடன், நிதியுதவியும் அளித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com