ரஜினி கட்சி தொடங்குவாரா என்று அவருக்கே தெரியாது- நடிகர் வடிவேலு கிண்டல்

நடிகர் ரஜினி கட்சி தொடங்குவாரா என்பது அவருக்கும் தெரியாது, நமக்கும் தெரியாது என நடிகர் வடிவேலு நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம் செய்தார்
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம் செய்தார்
Published on

தூத்துக்குடி:

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலக நன்மைக்காக சாமி தரிசனம் செய்ததாக கூறினார். கட்சிக்கு ஒருவர், ஆட்சிக்கு ஒருவர் என்ற ரஜினியின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார்.

ரஜினி அரசியலுக்கு வருகிறாரா என்பது உங்களுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது, அவருக்கும் தெரியாது. அவர் வரும்போது பார்த்துக்கொள்வோம். நான் முதல்வராகலாம் என நினைத்துள்ளேன். 2021-ல் நான் தான் தமிழக முதல்வர் என்று நகைச்சுவையுடன் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com