புதிய ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டில் தொழிலாளிக்கு பதில், நடிகர் படம் இடம் பெற்றதால் பரபரப்பு

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டில் தொழிலாளியின் படத்திற்கு பதில் நடிகர் சரவணன் படம் இடம்பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதிய ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டில் தொழிலாளிக்கு பதில், நடிகர் படம் இடம் பெற்றதால் பரபரப்பு
Published on

ஜலகண்டாபுரம்:

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் கம்போஸ்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வம். தொழிலாளி. இவர் பழைய ரே‌ஷன்கார்டுக்கு பதில், புதிய ஸ்மார்ட்கார்டு கேட்டு விண்ணப்பித்திருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு செல்வம் செல்போனுக்கு, ஸ்மார்ட்கார்டு தயாராக உள்ளதாக எஸ்.எம்.எஸ். வந்தது.

இந்த நிலையில் நேற்று ஜலகண்டாபுரத்தில் உள்ள பொன்னி கூட்டுறவு அங்காடியால் நடத்தப்படும் ரே‌ஷன் கடைக்கு சென்று ஸ்மார்ட் கார்டை செல்வம் பெற்றார். அதைப்பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். காரணம், புதிய ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டில் அவரது புகைப்படத்திற்கு பதிலாக நடிகர் சரவணன் படம் இடம் பெற்றிருந்தது.

இதனால், ரே‌ஷன் கடையில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக விற்பனையாளரிடம் கேட்டபோது, பொது சேவை மையத்திற்கு சென்று உங்களது புகைப்படத்தை கொடுத்து திருத்தம் செய்து கொள்ளுங்கள் என பதில் அளித்தார். பின்னர் நடிகர் சரவணன் படம் இடம் பெற்ற ஸ்மார்ட் ரே‌ஷன்கார்டை செல்வம் வீட்டுக்கு கொண்டு சென்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com