அதிமுக வெற்றி பெற்றால் நதிகள் இணைக்கப்படும் - நடிகர் கஞ்சா கருப்பு பேச்சு

அ.தி.மு.க. வெற்றி பெற்றால் தென்னக நதிகள் இணைக்கப்படும் என்று நடிகர் கஞ்சாகருப்பு பேசினார். #LokSabhaElections2019 #ADMK
அதிமுக வெற்றி பெற்றால் நதிகள் இணைக்கப்படும் - நடிகர் கஞ்சா கருப்பு பேச்சு
Published on

ஆண்டிப்பட்டி:

தேனி பாராளுமன்ற தொகுதி, ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நகைச்சுவை நடிகர்கள் வையாபுரி, கஞ்சாகருப்பு ஆகியோர் கண்டமனூர், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வரு‌ஷநாடு உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.

அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் வெற்றி பெற்றால் மத்திய மந்திரி ஆகி விடுவார். அதனால் தேனி தொகுதிக்கு ஏராளமான நலத்திட்டங்கள் கிடைக்கும். தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் தென்னக நதிகள் இணைக்கப்படும். இதன் மூலம் தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை முடிவுக்கு வரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நடிகர் வையாபுரி பேசுகையில், ஆண்டிப்பட்டி தொகுதி மறைந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி. அவர்கள் வென்ற பிறகு இந்த தொகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்களை வாரி வழங்கினர். அ.திமு.க.வின் கோட்டையாக உள்ள ஆண்டிப்பட்டி தொகுதியை வருகிற சட்டமன்ற தேர்தலிலும் பொதுமக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

மேலும் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா வழியில் இந்த தொகுதி மக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்கள் கிடைக்க நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பேசினார். #LokSabhaElections2019 #ADMK

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com