தா.பேட்டை அருகே விபத்தில் காயமடைந்த வாலிபர் பலி

மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் காயம் அடைந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தா.பேட்டை அருகே விபத்தில் காயமடைந்த வாலிபர் பலி
Published on

தா.பேட்டை:

தா.பேட்டை அடுத்த சிட்டிலரை கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 40). இவர் தும்பலம் கிராமத்தில் சலூன்கடை நடத்தி வந்தார். 

கடந்த 22-ந்தேதி நல்லப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக அன்பழகன் தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.

நாமக்கல் - தா.பேட்டை மெயின் ரோட்டில் மகாதேவி கைகாட்டி அருகில் மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் அன்பழகன் பலத்த காயம் ஏற்பட்டது. மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அன்பழகன் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

விபத்து குறித்து தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவா, சப்- இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com