

தென்ஆப்பிரிக்காவின் அதிரடி ஆட்டக்காரர் ஏபி டி வில்லியர்ஸ். இவர் கடந்த 2013-ம் ஆண்டு டேனியலி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு வயதில் ஆப்ரஹாம் டி வில்லியர்ஸ் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் கடந்த 17-ந்தேதி டி வில்லியர்ஸ் மனைவி டேனியலிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு ஜான் ரிச்சார்டு டி வில்லியர்ஸ் எனப் பெயரிட்டுள்ளார்.
2-வது ஆண்குழந்தை பிறந்தது குறித்து டி வில்லியர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இப்போது நான்கள் நான்கு பேர்!!!. இந்த அற்புதமான ஆசீர்வாதத்திற்காக கடவுளுக்கு நன்றி. ஜான் ரிச்சார்டு டி வில்லியர்ஸ் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு பிறந்தான். தாயும் சேயும் என இருவரும் வீட்டில் நலமாக உள்ளனர். எனது மனைவி அற்புதமான பெண். மீண்டும் ஒருமுறை நம்ப முடியாத தைரியம் மற்றும் வலிமையை வெளிக்காட்டியுள்ளார்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.