டெல்லி தேர்தல் வெற்றியை மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கிய கெஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சட்டமன்றத் தேர்தல் வெற்றியை மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக வழங்குவதாக கூறியுள்ளார்.
கெஜ்ரிவாலுக்கு கேக் ஊட்டும் மனைவி
கெஜ்ரிவாலுக்கு கேக் ஊட்டும் மனைவி
Published on

புதுடெல்லி:

டெல்லி சட்டசபைத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. இதனால் ஆம் ஆத்மி கட்சியினர் நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த வெற்றி கொண்டாட்டம் ஒருபுறமிருக்க, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார். சுனிதாவின் பிறந்தநாளை இன்று கேக் வெட்டி கொண்டாடிய கெஜ்ரிவால், டெல்லி தேர்தல் வெற்றியை மனைவிக்கு பரிசாக வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

கணவர் கெஜ்ரிவாலுக்காக தீவிர பிரச்சாரம் செய்த சுனிதா கெஜ்ரிவாலுக்கு, கட்சி தொண்டர்கள் மற்றும் நலம்விரும்பிகள் டுவிட்டர் மூலமாக பிறந்தநாள் வாழ்த்துக்களையும், வாழ்த்து செய்திகளையும் அனுப்பியவண்ணம் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com