மேலும் ஒரு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பாஜகவில் இணைந்தார்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி எம்.எல்.ஏ. தேவிந்தர் குமார் ஷெராவத் இன்று பாஜகவில் இணைந்தார். #AAPMLA #BijwasanMLA #AnilBajpai #MLAjoinsBJP #DevinderKumarSehrawat
மேலும் ஒரு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பாஜகவில் இணைந்தார்
Published on

புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தலில் நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக காய்நகர்த்தி வருகிறது.

டெல்லியின் ஆளும்கட்சியான ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை இழுக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு குதிரை பேரம் நடத்தி வருவதாகவும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு பத்து கோடி ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் தலைமை மீது அதிருப்தி அடைந்திருக்கும் 14 எம்.எல்.ஏ.க்கள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக டெல்லி பாஜக முன்னாள் தலைவரும் மத்திய மந்திரியுமான விஜய் கோயல் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய பிஜ்வாசன் தொகுதி எம்.எல்.ஏ. தேவிந்தர் குமார் ஷெராவத் இன்று விஜய் கோயல் முன்னிலையில்  பாஜகவில் இணைந்தார்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஆம் ஆத்மி நிர்வாகிகள் எம்.எல்.ஏ. சீட் கொடுப்பதற்கு பெண்களை விருந்தாக கேட்கிறார்கள் என்று சமீபத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேவிந்தர் குமார் ஷெராவத் பகிரங்கமாக கடிதம் எழுதி இருந்தார். இதற்காக இவர் கட்சியில் இருந்து இடைக்கால நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

டெல்லி சட்டசபைக்கு உட்பட்ட காந்திநகர் தொகுதி எம்.எல்.ஏ. அனில் பாஜ்பாய் கடந்த 3-ம் தேதி பாஜகவில் இணைந்தது நினைவிருக்கலாம். #AAPMLA #BijwasanMLA  #AnilBajpai #MLAjoinsBJP #DevinderKumarSehrawat 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com