நில ஆவணங்களுக்கு ஆதார் எண் கட்டாயம்: மத்திய அரசு சுற்றறிக்கை

நில ஆவணங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
நில ஆவணங்களுக்கு ஆதார் எண் கட்டாயம்: மத்திய அரசு சுற்றறிக்கை
Published on

மத்திய அரசு ஆதார் எண்ணை பல்வேறு திட்டங்களுக்கு கட்டாயமாக்கி வருகிறது.

வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கும், பான் அட்டை பெறுவதற்கும் ஜூலை 1-ந்தேதி முதல் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து வங்கி கணக்குகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் நில ஆவணங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

1950-ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட எந்த ஒரு நில ஆவணத்தையும் அது விவசாய நிலம் அல்லது விவசாய பயன்பாடு இல்லாத நிலம், வீடுகள் என எதுவாக இருந்தாலும் ஆகஸ்டு 14-ந்தேதிக்குள் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும். அத்துடன் நில ஆவணங்களுடன் நில உரிமையாளரின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

அப்படி இணைக்கப்படாத நில ஆவணங்கள் பினாமி பரிமாற்ற (தடுப்பு) திருத்த சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு உட்பட்டதாக கருதப்படும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com