கணவரின் 2-வது மனைவியின் மகளை கொடூரமாக கொன்ற பெண்

காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா அருகே கணவரின் 2வது மனைவியின் மகளை கொடூரமாக கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கணவரின் 2-வது மனைவியின் மகளை கொடூரமாக கொன்ற பெண்
Published on

ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் யூரி பகுதியை சேர்ந்தவர் முஸ்தாக் அகமது. இவர் ஏற்கனவே உள்ளூரை சேர்ந்த பக்மீதா என்ற பெண்ணை திருமணம் செய்திருந்தார். அவர் மூலம் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் முஸ்தாக் அகமது ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இன்னொரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்தார். அவர் மூலம் 9 வயது பெண் குழந்தை உள்ளிட்ட குழந்தைகள் இருந்தன.

முஸ்தாக் அகமது 2-வது மனைவி வீட்டிலேயே அதிகமாக தங்குவது வழக்கம். மேலும் 2-வது மனைவியின் மகள் மீது தான் அதிக பாசம் காட்டி வந்தார்.

இது முதல் மனைவி பக்மீதாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே இந்த சிறுமியை தீர்த்து கட்ட திட்டமிட்டார். கடந்த மாதம் 23-ந்தேதி சிறுமியை நைசாக பேசி பக்மீதா அங்குள்ள காட்டுக்கு அழைத்து சென்றார்.

தனது மகன் ‌ஷகீல் மற்றும் அவரது நண்பர்கள் கெய்சர் அகமது (வயது 19), நசீர் அகமது கான், ஆசிக் அகமது ஆகியோரை காட்டு பகுதியில் பதுங்கி இருக்க சொல்லி இருந்தார். சிறுமியை அங்கு அழைத்து சென்றதும் அவளை 4 பேரும் கற்பழிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

சகோதரி என்றும் பாராமல் ‌ஷகீல் முதலில் கற்பழித்தார். பின்னர் மற்ற 3 பேரும் கற்பழித்தனர். இதைத்தொடர்ந்து பக்மீதா அந்த சிறுமியின் கழுத்தை நெரித்தார். அப்போது ‌ஷகீல் கோடாரியை எடுத்து சிறுமி தலையில் வெட்டினார். இதில் அந்த இடத்திலேயே அவள் இறந்துவிட்டாள். அவளது இரு கண்களையும் ‌ஷகீல் தோண்டி எடுத்தான்.

பின்னர் 5 பேரும் சேர்ந்து சிறுமி மீது பேட்டரியின் ஆசிட்டை ஊற்றி தீவைத்தனர். உடல் அரைகுறையாக எரிந்த நிலையில் அங்குள்ள புதருக்குள் வீசினார்கள். பின்னர் மர தழைகளை போட்டு மூடிவிட்டு சென்று விட்டனர்.

மகளை காணாமல் முஸ்தாக் அகமது போலீசில் புகார் கொடுத்தார். 10 நாட்களாக தேடிவந்த நிலையில் கடந்த 2-ந்தேதி அவரது உடல் அழுகிய நிலையில் காட்டு பகுதியில் மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவள் கற்ழித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

முதல் மனைவி பக்மீதா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தியதில் நடந்த முழு கதையையும் போலீசாரிடம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அவரையும் மற்ற 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com