ராஜஸ்தான்: ஹரித்வார் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த யாத்ரீகர்கள் அடங்கிய பேருந்து ஹரித்வார் நோக்கி செல்லும் போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியதில் 6 பெண்கள் உள்ளிட்ட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராஜஸ்தான்: ஹரித்வார் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி
Published on

ஜெய்ப்பூர்:

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த யாத்ரீகர்கள் சிலர் 16 நாள் பயணமாக உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார், புஷ்கர் ஆகிய ஸ்தலங்கள் செல்வதற்காக பேருந்தில் நேற்றிரவு அகமதாபாத்திலிருந்து புறப்பட்டனர்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள நேஹ்லா என்ற கிராமத்தின் அருகே இன்று காலை பேருந்து சாலையில் வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த பைக் மீது மோதாமல் தவிர்ப்பதற்காக டிரைவர் பேருந்தை சட்டென திருப்பியுள்ளார்.

ஆனால், வேகமாக சென்ற பேருந்து திடீரென திரும்பியதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, திடீரென சாலையில் பேருந்து கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் பேருந்திலிருந்த 6 பெண்கள் உள்ளிட்ட 9 யாத்ரீகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 22 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பலியானவர்களின் பிரேதங்களை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த யாத்ரீகர்கள் அனைவரும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com