பாகிஸ்தான் வெள்ளம் - மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி பெண் உள்பட 7 பேர் பலி

பாகிஸ்தான் நாட்டில் பெய்து வரும் மழையால் ஏற்பட்ட விபத்துக்களில் சிக்கி பெண் உள்பட 7 பேர் பரிதாபமாக பலியாகினர். #PakistanRain
பாகிஸ்தான் வெள்ளம் - மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி பெண் உள்பட 7 பேர் பலி
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்நிலையில், சித்ரால் மாவட்டத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கிருந்த வீடுகளின் மீது பாறைகள் விழுந்தன. இந்த நிலச்சரிவில் சிக்கி பெண் உள்பட 3 பேர் நிலச்சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

தகவலறிந்து மீட்புக் குழுவினர் அங்கு சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். 

பன்னர் மாவட்டத்தில் ஒரு வேனில் பயணம் செய்தோர் அப்பகுதியில் உள்ள வளைவில் திரும்பும்போது வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர். விபத்து பற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். #PakistanRain

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com